சனாதன எதிர்ப்பு குறித்து பேசுமாறு கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி மாலை 3 மணி அளவில் சனாதன எதிர்ப்பு குறித்து பேச மாணவிகளுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் ராஜாராமன் மாணவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “திருவிக அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பேச வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் திமுக எம்.எல்.ஏவுமான பூண்டி கலைவாணன் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், “நம் நாட்டையே இந்திய தாய்திருநாடு என்றுதான் அழைக்கிறோம். நம் நாட்டினுள் ஊடுறுவிய சனாதன வாதிகளால் பெண்மை சிறுமைபடுத்தப்பட்டது. திராவிடம் தழைத்தபின் தாள் பெண்ணினம் உயர்வு பெற்றது. உதாரணமாக பெண்களுக்கு வாக்குரிமை, ரவிக்கை அணியும் உரிமை, சொத்துரிமை, கல்வி பெரும் உரிமை போன்றவை கிடைத்தது.
இன்று சனாதனவாதிகள் மீண்டும் 14 குலக்கல்வி முறையை புதிய கல்லிக் கொள்கைகள் வாயிலாக திணித்திட முயலும் வேலையில், நமது திராவிட இயக்க இளம் தலைவர் அவர்கள் சனாதனத்தை வேரோடு வெட்டி மண்ணோடு அகற்றுவோம் என சூளுரைதிருக்கிறார். எனவே மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று மாலை 03.00 மணியளவில் காட்டூர், கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.