கல்லூரிக்கு செல்வதாக கூறி விஜய்யை பார்க்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

 
ச்

தஞ்சையில் நடைபெற்ற தவெக  விஜய் கூட்டத்திற்க்கு வந்த கட்சியினர் மொத்தம் 5 பேர் வேறு வேறு இடங்களில் வாகன விபத்தில் படுகாயமடைந்து தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்லூரிக்கு போன மகன் நடிகர்  விஜயை பார்க்கசென்று  விபத்தில் சிக்கி தலையில்  படுகாயத்துடன் சிகிச்சைபெருவதாக  விக்னேசின் தந்தை பால் வியாபாரி பாண்டியன் கூறியுள்ளார். நடிகர் விஜயை பார்க்க இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து விபத்தில் சிக்கிய 5 பேரில் படுகாயமடைந்த  விக்னேசின் தந்தை  பால் வியாபாரி பாண்டியன் கூறுகையில், “எனது மகன் விக்னேஷ் திருச்சி நேஷனல் காலேஜில் படித்து வருகிறான். இன்று காலேஜ்க்கு போறதா சொல்லிட்டு போனவன். அவனது நண்பர் ஆரூணுடன் அவனது டூவீலரில் விஜயை பார்க்க போய் விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் 48 மணிநேரம் தொடர்சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் கவலையாக இருக்கிறது” என்றார்.