காய்ச்சலுக்காக மெடிக்கலில் ஊசி போட்ட கல்லூரி மாணவர் பலி! கண்ணீர் விட்டு கதறிய தாய்

 
s

காய்ச்சலுக்காக மெடிக்கலில் ஊசி போட்ட கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த சேலையூர் சந்திரன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ்(18), சந்தோஷபுரத்தில் உள்ள சைவட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் வீட்டின் அருகே ராமகிஷ்ணாபுரத்தில் உள்ள தனியார்ஸ்ரீ ராகவேந்திரா மெடிக்கலில் ஊசி போட்டுக்கொண்டார். இதனால் அந்த ஊசி போட்ட இடத்தில் அதிக மாக வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் நண்பர்களிடம் கல்லூரி மாணவன் சந்தோஷ் உயிரிழப்புக்கு அந்த மெடிக்கலில் ஊசி போட்ட பெண்தான் காரணம் என கோபமைந்துள்ளனர். இதனால் பிரேத்தை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஊசி போட்ட ஸ்ரீ ராகவேந்திரா மெடிக்கல் கடை மீதும் கல் வீசி தாக்கியுள்ளனர். பெற்றோர் உயிரிழப்புக்கு காரணம் கண்டறிய கூறி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் சாவிற்கு காரணம் கண்டறிய சேலையூர் போலீசார் சந்தோஷின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வு  அனுப்ப முடிவு செய்துள்ளனர்.