கோவை சம்பவம் - விசாரணையில் அதிர்ச்சி

 
ந் ந்

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது  என்ன? | coimbatore girl student sexual assault police catches three men by  gun shot - hindutamil.in

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 11 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெரிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், மாணவியிடம் செல்போனை பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்த ஆண் நண்பரின் செல்போனை, பாஸ்வேர்டை கேட்டு பறித்துச்சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மாணவியிடம் பறித்து சென்ற செல்போனை பயன்படுத்தியபோது கும்பல் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்த காவல்துறை தெரிவித்துள்ளனர்.