கோவை மாணவி கூட்டு பலாத்காரம்: அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு..!!

 
Q Q
கோவை, பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்த 2ம் தேதி, ஆள்நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில், கல்லுாரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மொபட்டில் வந்த மூன்று நபர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர். மாணவி மற்றும் ஆண் நண்பரை போலீசார் மீட் டனர். சிசிடிவி கேமரா மற்றும் மாணவியிடம் பறித்து சென்ற மொபைல் போன் டவர் உதவியுடன் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஸ், 30, இவரது சகோதரர் கார்த்திக், 21, இவர்களது உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20, என்பது தெரியவந்தது. துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்தவர்களை கடந்த 3ம் தேதி இரவில், போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
குண்டு காயம்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கோவை ஜே.எம்:2, மாஜிஸ்திரேட் அப்துல் ரகுமான், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவர்களிடம் விசாரித்த பிறகு, நவ., 19 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் .
இந்த சம்பவம் தொடர்பாக, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி இந்த வழக்கை துரிதமாக விசார ணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மூவரையும் , 'போலீஸ் கஸ்டடி' எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை, பாதிக்கப்பட்ட மாணவி, அடையாளம் காட்டும் வகையில், கோவை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.