கோவை மாணவி தற்கொலை- மாணவியின் வீட்டிலிருந்து நோட்டு, புத்தகங்கள் பறிமுதல்

 
covai student issue

கோவை 17 வயது பள்ளி மாணவி தற்கொலை  விவகாரம் தொடர்பாக மாணவியின் வீட்டில் இருந்து அவரது நோட்டுகள் பரிசோதனைக்காக போலிசார் எடுத்துச் சென்றனர். 

Coimbatore student suicide case: Teacher arrested || கோவை மாணவி தற்கொலை  விவகாரம்: ஆசிரியர் கைது

கோவையில் 17 வயது மாணவி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் , கோவை தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதூன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவி புகார் அளித்தும் போலீசில் தகவல் சொல்லாமல் இருந்த அப்பள்ளியின் முதல்வர் மிரா ஜாக்சனையும் போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். 

இந்நிலையில் பள்ளிக் கல்வி துறை சார்பில் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விசாரணை நேற்றுடன் நிறைவான நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. நாளை  பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சின்மயா பள்ளி நிர்வாகத்திடம் மேற்கொண்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே மாணவியின் மரணம் தொடர்பாக கிடைக்கப்பட்ட துண்டு சீட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்காக மாணவியின் வீட்டுற்கு சென்ற போலீசார் அங்கு அவரது நோட்டு, புத்தகங்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.