”கோவையில் சரித்திர சாதனையை படைக்க வேண்டும்”- செந்தில் பாலாஜி

 
”கோவையில் சரித்திர சாதனையை படைக்க வேண்டும்”- செந்தில் பாலாஜி

கோவைக்கு திமுக அரசு என்ன செய்தது என கேள்வி கேட்பவர்கள் அரை மணி நேரம் கோவை செம்மொழி பூங்காவிற்கு சென்று வர வேண்டும் என கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Image

இன்று காலை கோவைத் தெற்குத் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி புலிய குளம் பகுதி மக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், “கோவைக்கு திமுக அரசு என்ன செய்தது என கேள்வி கேட்பவர்கள் அரை மணி நேரம் கோவை செம்மொழி பூங்காவிற்கு சென்று வர வேண்டும். பட்டா பிரச்னைக்கு தீர்வு காணப்படும், நீண்ட நாள் கோரிக்கையான சமுதாய கூடம் அமைத்து தருவோம். கோவையில் 10 தொகுதிகளை பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் உதய சூரியன் வென்றது என்ற சரித்திர சாதனையை படைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.