கோவையில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை திருமணம் செய்ய சம்மதித்த காதலன்
கோவையில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை அவரது காதலன் திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.

கோவை விமான நிலையம் அருகேயுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி காரில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை ஒரு கும்பல் வழிமறித்தது. மாணவியின் நண்பரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, மாணவியை இழுத்துச் சென்று மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பீளமேடு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கருப்பசாமி (எ) சதீஷ், கார்த்திக் (எ) காளீஸ்வரன் மற்றும் தவசி (எ) குணா ஆகிய மூவரையும் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். கைதான மூன்று குற்றவாளிகளுக்கும் வாழ்நாள் முழுமைக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. சம்பவம் நடந்த 126 நாட்களில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்ள காதலன் சம்மதித்துள்ளார்.

