கோவை, நெல்லை மேயர்: விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு

 
ff

கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு இம்மாத இறுதியில் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

tt

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணனும்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ff

இந்நிலையில்  கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு இம்மாத இறுதியில் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளது. கோவை மேயர் கல்பனா மற்றும் நெல்லை மேயர் சரவணன் சில நாட்களுக்கு முன்பு தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.