கோவை மேயர் கல்பனாவின் ராஜினாமா ஏற்பு

 
tt

இன்று நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் கோவை மேயர் கல்பனாவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.

Image

கோவை மாநகராட்சி திமுக மேயராக இருந்த  கல்பனா ஆனந்தகுமார் கடந்த 3ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கினார். உடல் நிலையை காரணம் காட்டி கல்பனா பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

coimbatore

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் கோவை மேயர் கல்பனாவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.  மேயர் ராஜினாமா செய்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய அதிமுகவினரால் திமுக - அதிமுக கவுன்சிலர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்  9 நிமிடங்களில் மாநகராட்சிக் கூட்டம் முடிவடைந்தது.