கோவையில் வெற்றியடைய போவது அகமதாபாத்தா? லக்னோவா?

 
tn

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லப்படும் கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில்  இயங்கி வருகின்றன .நெசவுத்தொழில் ,பஞ்சாலைகள் ,கனரக தொழிற்சாலைகள் ,மென்பொருள் நிறுவனங்கள் என கோவை பரபரப்பாக இயங்கி வரும் அதே வேளையில் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளது.  கோவை நாடாளுமன்ற தொகுதி சிங்காநல்லூர் , கோவை தெற்கு,  கோவை வடக்கு , கவுண்டம்பாளையம் ,சூலூர் ,பல்லடம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டது.  கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அதன் தமிழக தலைவர் அண்ணாமலை,  திமுக சார்பில் முன்னாள் மேயரும்,  மாநகர் மாவட்ட அவை தலைவருமான கணபதி ராஜ்குமார்,  அதிமுக வேட்பாளராக சிங்கை ஜி ராமச்சந்திரன் ஆகியோர் களம் காண்கின்றனர் . இதனால் கோவை மாவட்டம் தமிழகத்தின் விஐபி ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது.

 திமுக வேட்பாளர் கணபதி ப  ராஜ்குமாருக்கு ஆதரவாக கோவை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் அமைச்சர் டி ஆர் பி ராஜா களத்தில் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதே சமயம் சிங்கை ஜி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் இயங்கி வருகின்றனர்.  பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன்  பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகிறார் . நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 

இப்படியாக கோவை மாவட்டத்தில் மட்டும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என மாறி மாறி வெற்றி வாய்ப்பை  மாவட்ட மக்கள் அளித்து வருகின்றனர்.  குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் ஐந்து முறையும்,  கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏழுமுறையும்,  திமுக மற்றும் பாஜக தலா இரண்டு முறையும் , அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.  மத அடிப்படையில் இந்துக்கள் 80 சதவீதமும்,  கிறிஸ்தவர்கள் ஐந்து முதல் பத்து சதவீதமும்,  இஸ்லாமியர்கள் ஏழு முதல் எட்டு சதவீதமும்,  ஜெயின் சமூகத்தினர் 1.5 சதவீதமும் பிற மதத்தினரும் இங்கு உள்ளனர்.  குறிப்பாக கோவை மாவட்டத்தை பொருத்தவரை யார் கோவை தொகுதியில் வெற்றி கனியை பறிக்கப் போவது என்ற மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கோவையில் வெற்றி அடையப் போவது அகமதாபாத்தா? லக்னோவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

coimbatore

 அகமதாபாத்? லக்னோவா ? இது என்னடா புது டுவிஸ்ட்டா இருக்குன்னு தானே யோசிக்கிறீங்க. அது வேற ஒன்னும் இல்லங்க,  அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள சிங்கை ஜி இராமச்சந்திரன் அகமதாபாத் இந்திய மேலாண்மை கழகத்திலும் , அண்ணாமலை லக்னோ இந்திய மேலாண்மை கழகத்திலும் படிச்சவங்க..!!