கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம்... ‘நான் கடத்தப்படவில்லை’ என பெண் விளக்கம்

 
கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம்... ‘நான் கடத்தப்படவில்லை’ என பெண் விளக்கம் கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம்... ‘நான் கடத்தப்படவில்லை’ என பெண் விளக்கம்

கோவை இருகூரில் கடத்தபட்டதாக கூறப்பட்ட பெண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஆண்நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் பெண்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்திய நிலையில், கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்வது போல  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கோவை இருகூரில் கடத்தபட்டதாக கூறப்பட்ட பெண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் கணவருடன் காரில் பேக்கரிக்கு சென்று டீ குடித்துவிட்டு வந்தோம். அப்போது காரில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காரில் இருந்து இறங்கினேன். நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவேன் என எண்ணி கணவர் வேகமாக என்னை காருக்குள் இழுத்தார். காருக்குள் இருந்த கணவர் என்னை அடித்தார். நானும் அவரை அடித்தார்” என்றார்.