கோவை சிறுமி தர்ஷினி படுகொலை: வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம்!

 
Vanathi seenivasan

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கோவையில் 10 வயது சிறுமி தர்ஷினி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு குளக்கரையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த குற்றத்தை செய்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.


மேலும், தமிழக அரசு சிங்க பெண் படை போன்ற சிறப்பு காவல் படைகளை அமைத்திருந்தாலும், இது போன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கின்றன. இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.