கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து - ஓட்டுநர் கைது

 
ட்

கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்துக்குள்ளான விவகாரத்தில் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

covai

கோவை அவினாசி மேம்பாலம் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது. கொச்சியில் இருந்து கோவைக்கு கேஸ் ஏற்றிவந்த நிலையில் டேங்கர் லாரி அதிகாலை விபத்தில் சிக்கியது. கவிழ்ந்து கிடக்கும் டேங்கர் லாரியில் கேஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டது.  4 மணி நேரத்திற்கு மேலாக எரிவாயு கசிவை தடுக்கும் பணி நடைபெற்றது. டேங்கரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி நடைபெற்றது. டேங்கரில் ஏற்பட்ட கேஸ் கசிவை, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். கிரேன் மூலம் டேங்கர் தூக்கி நிறுத்தப்பட்டது. கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் குடோனுக்கு டேங்கர் லாரி பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்துக்குள்ளான விவகாரத்தில் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைதானவுடன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட மோட்டார் பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.