கோவை எல்காட் ஐ.டி.பூங்கா.. நவ.4ம் தேதி திறந்து வைக்கிறார் முதலவர் மு.க.ஸ்டாலின்!

 
கோவை எல்காட் ஐ.டி.பூங்கா.. நவ.4ம் தேதி திறந்து வைக்கிறார் முதலவர் மு.க.ஸ்டாலின்!

கோவை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4ம் தேதி திறந்து வைக்க உள்ளார். அதேபோல் அன்றைய தினம் கலைஞர் நூலகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.  

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில்  ஐடி பூங்காவை நிறுவி வருகிறது. 2 மற்றும் 3ம் கட்ட நகரங்களில் மினி டைடல் பூங்காக்களையும், சென்னை, கோவை போன்ற முதன்மை நகரங்களில் எல்காட் டைடல் பூங்காக்களையும் அமைத்து வருகிறது. 

கோவை எல்காட் ஐ.டி.பூங்கா.. நவ.4ம் தேதி திறந்து வைக்கிறார் முதலவர் மு.க.ஸ்டாலின்!

அந்தவகையில் கோவை விளாங்குறிச்சியில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2020ல் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.  இந்த பணி 3 மாதங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றுள்ள நிலையில், கோவையில் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் நவம்பர் 4ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

கோவை எல்காட் ஐ.டி.பூங்கா.. நவ.4ம் தேதி திறந்து வைக்கிறார் முதலவர் மு.க.ஸ்டாலின்!

மேலும் கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.  சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நூலகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ள டெண்டரும் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில்  கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக கோவையில் கலைஞர் நூலகத்திற்கும் நவம்பர் 4ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்  நாட்ட உள்ளார்.