கோவையில் பரபரப்பு: ஓட்டுநருக்குத் திடீர் வலிப்பு; கடைக்குள் புகுந்த பள்ளி வாகனம்!
Nov 12, 2026, 10:48 IST1794460712174
கோவை: சுந்திராபுரத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதில் சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்து!
கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி பகுதியில் இன்று (நவம்பர் 12) காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாகச் சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.மாணவர்கள் அனைவரும் உடனடியாக மாற்று வாகனம் மூலம் பாதுகாப்பாகப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் மயக்கமடைந்த ஓட்டுநரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்துப் போக்குவரத்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

