இன்று கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..! ஏன் தெரியுமா ?

 
1

கோயம்புத்தூர் மாவட்டம் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று காலை வழக்கம்போல் நடைபெறும் என்றும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூர் விடுமுறை பொருந்தும் என தெரிவித்துள்ளார். 

விடுமுறை அறிவிக்கப்பட்ட 24 பள்ளிகளின் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. CCMA மகளிர் மேல்நிலைப் பள்ளி, வீராசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி, புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளி, சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, SBOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புனித ஃப்ரான்ஸிஸ் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புனித ஜொசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  புனித மெரீஸ் மேல்நிலைப் பள்ளி, புனித மைக்கேல்ஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, மில்டன் மெட்ரிக் பள்ளி.அதேபோல் ஷ்ருஸ்டி வித்யாலயா, வாசவி வித்யாலயா, மதர்லாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, T.E.LC நடுநிலைப் பள்ளி, ICC நடுநிலைப் பள்ளி, நல்லாயன் தொடக்கப் பள்ளி, மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒப்பனக்காரர் வீதி, ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி கோவை நகரம் VH ரோடு,  CSI ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மன்பல் உலும் தொடக்கப் பள்ளி, மன்பல் உலும் மேல்நிலைப் பள்ளி, பிரசென்டேசன் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி, மாரன்னகவுண்டர் உயர்நிலைப் பள்ளிகள் அடங்கும்.