அண்ணாமலை சவால் விடுத்த கோவை வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ..!

 
1

தமிழ்நாட்டில் இத்தனை காலம் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இந்த முறை தனியாகக் கூட்டணியை அமைத்துள்ளது. பாமக, தாமக, டிடிவி, ஓபிஎஸ் எனப் பலரும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

இந்தச் சூழலில்,தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 9 லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவித்தது பாஜக.

இதில் கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், டெல்லி பாஜக தலைமை உத்தரவின் பெயரில் கோவையில் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அதிமுக சார்பில் கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கை ராமச்சந்திரன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சேலஞ் செய்துள்ளார். பாஜகவின் வேட்பாளர் பட்டியலைப் பகிர்ந்துள்ள சிங்கை ராமச்சந்திரன் விஜய் பட டயலாக்கான "ஐ யம் வெயிட்டிங்" என்று பதிவிட்டு அவர் அண்ணாமலையையும் டேக் செய்துள்ளார்.