சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தை இடம் மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம்!

 
bus

சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தை இடம் மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

tn

 புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அல்லது பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது இந்தியாவின், சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும். கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கும் தெற்காசிய விளையாட்டுகளுக்காக கட்டப்பட்ட சிற்றூருக்கும் இடையே உள்வட்டச் சாலையில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.  இதனை நவம்பர் 18, 2002 இல் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார். நகரின் முக்கிய வாயிலாக விளங்கும் இந்த முனையம் 2000 பேருந்துகளையும் 200,000 பயணிகளையும் மேலாளும் திறனுடையது.

omni bus

இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தை சென்னை வெளிவட்ட சாலைக்கு மாற்ற பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.  கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான சாதிக் பொருட்களை ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.