முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’
தமிழகம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு 2,545 பணியிடங்களை உருவாக்கி ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடும் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்வர் விஜயால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடி பாதுகாப்புப் படையில் 2,545 பணியிடங்களை உருவாக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதற்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 70 பிரிவுகள், 140 எஸ்.ஐ.க்கள், 420 காவலர்களுடன் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடங்கப்பட்டுள்ளது. 2,545 புதிய பணியிடங்களை உருவாக்கிய பின் முழு பலத்துடன் செயல்படும். 51 இன்ஸ்பெக்டர்கள், 644 எஸ்.ஐ.க்கள், 1,843 காவலர்கள் இடம்பெறுவர். 319 ஜீப்கள், 101 இருசக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. காவலர்கள் உடையில் Live stream- உடன் Body கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பணியிடங்களை நிரப்பிய பின் மாநிலம் முழுவதும் 270 பிரிவுகள் செயல்படும். சிங்கப்பெண் அதிரடிப்படை முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் என்பது குறிப்பிடதக்கது. பெண்கள் பாதுகாப்புக்கு 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், அதற்கென்று தனி எண்கள் இல்லை என சிங்கப்பெண் அதிரடிப்படை தலைவர் ஐ.ஜி. பவானீஸ்வரி அறிவித்துள்ளார்.

