முதல்வர் விஜய் கான்வாயில் விபத்து! ரன்னிங்கில் இறங்க முயன்று தடுமாறி விழுந்த பாதுகாவலர்!

 
1

மதுரை விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி அரசு மருத்துவமனையை நோக்கிச் சென்று கொண்டிருந்த முதல்வர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பாதுகாவலர் ஒருவர், ரன்னிங்கில் கீழே இறங்க முயன்ற போது, திடீரென தடுமாறி கீழே விழுந்தார்


 

முதல்வரின் வாகனத்திற்குப் பின்னால் வந்த அதிவிரைவுப் பாதுகாப்புப் படை வாகனத்தில் இருந்த பாதுகாவலர் ஒருவர், வாகனம் மெதுவாகச் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென 'ரன்னிங்கில்' கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நடைபாதையின் ஓரத்தில் கால் தடுமாறிச் சாலையில் சுருண்டு விழுந்தார்.

கான்வாய் வாகனம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரி சாலையில் விழுந்ததைக் கண்ட சக அதிகாரிகளும், அருகில் நின்றிருந்த பொதுமக்களும் பதறியடித்து ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர்.

உடனடி முதலுதவி:

உடனடியாக கான்வாயின் பின்னால் வந்த அவசர ஊர்தி மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்த அதிகாரியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாகப் பின்னணியில் வந்த பிற வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அவருக்குப் பெரிய அளவிலான அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் சிறு காயங்களுடன் தப்பினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியின் போது வாகனங்கள் இயங்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என மூத்த காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.