ஒருவழியாக கோட்டை கழற்றிய விஜய்... கோட்டையை சுற்றிப்பார்த்தார்!
Updated: May 22, 2026, 16:54 IST1779449093263
சென்னை தலைமைச் செயலகத்தை பேட்டரி வாகனத்தில் சென்று பார்வையிட்டார் முதல்வர் விஜய்.

இன்று தனது அலுவல் பணிகளை முடித்த முதல்வர் விஜய் இன்று தலைமை செயலகத்தை பேட்டரி காரில் சுற்றிவந்தார். தலைமை செயலகத்தில் உள்ள மியூசியம், சர்ச், ராணுவத்துக்கு சொந்தமான இடங்களையும் பார்வையிட்டார். சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள பழமையான செயிண்ட் மேரிஸ் தேவாலயத்துக்கு சென்றார். அதுமட்டுமின்றி பல்வேறு துறை அலுவலகங்களை பார்வையிட்டார். முதல்வர் விஜயை காண ஏராளமான ஊழியர்கள் குவிந்தனர். தலைமை செயலக ஊழியர்களும் தொண்டர்களும் குழுமியிருந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.

