முதல்வர் விஜய் அதிரடி : 2 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு..!

 
1

மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுமார் 30 கி.மீ. இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் வைக்கப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலைத் துறைப் பெயர் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதே போல தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் இந்தி எழுத்துக்கள் வைக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மதுரையிலும் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து, ஹிந்தியில் எழுதுவதற்கு காரணமான அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை எஸ்.ஹெச் 93 சார்பில் புதிதாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழிகாட்டி பலகை மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிறுவப்பட்டது.

அந்த பலகையில், திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, துாத்துக்குடி, திருச்செந்துார் ஆகிய ஊர்களுக்கு செல்வது தொடர்பான வழிகாட்டப்பட்டு, தொலைவு விபரமும் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை அறிவிப்பு பலகைகளில், ஊர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படுவது வழக்கம். இந்த பலகையில் ஊர்களின் பெயர்கள் ஹிந்தியிலும் எழுதப்பட்டிருந்தன. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையில் ஹிந்தியில் ஊர் பெயர்கள் இருப்பதாக புகார்கள் கிளம்பின. இதையடுத்து ஹிந்தியில் ஊர் பெயர் எழுதிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பூமிநாதன், உதவி பொறியாளர் முத்துலட்சுமி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.