பணம், அதிகாரத்தை வீழ்த்தி ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு நன்றி- விஜய்
பணத்தையும், அதிகாரத்தையும் வீழ்த்தி ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு நன்றி என முதல்வர் விஜய் கூறினார்.

கோட்டையில் கொடியேற்று சுதந்திர தின விழா உரையாற்றிய முதல்வர் விஜய், “கோட்டை கொத்தளத்தில் என்னை தேசியக் கொடி ஏற்ற வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. மக்களுக்கு பயன் உள்ள முந்தைய ஆட்சியின் திட்டங்கள் தொடரும். ரூ.134 கோடி குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது. காலை உணவுத்திட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும். தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் திட்டம் செப்.15ஆம் தேதி தொடங்கப்படும். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களை கனிவாக நடத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சட்டம், ஒழுங்கு கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது. மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும்” என்றார்.

