விபத்தில் சிக்கிய CM விஜய் கான்வாய்
Jul 30, 2026, 14:58 IST1785403707922
மெட்ரோ ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் வீடு திரும்பியபோது TANGO கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கின.
மெட்ரோ ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் நேற்று வீடு திரும்பியபோது TANGO கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கின. திருவான்மியூர் RTO சிக்னல் சந்திப்பு அருகே, கான்வாயில் இடதுபுற ட்ராக்கில் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத தனியார் கார், திடீரென கான்வாய் செல்லும் வலது ட்ராக்கில் மாறியதால் கார்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. TANGO கான்வாயில் வந்த அடையார் துணை ஆணையரின் கார் சடன் பிரேக் அடித்தபோது, பின்னால் வந்த டெம்போ டிராவலர் பிரேக் அடித்தும் நிற்காமல் மோதியதால் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.

