தாராபுரத்தில் இன்று பிரச்சாரம்! பெரிய திட்டத்தை வைத்திருக்கும் முதல்வர் விஜய்

 
விஜய்

தாராபுரத்தில் இன்று முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தவுள்ளார்.

“சட்டசபையில் பார்ட்டி பண்டுனு தான் சொன்னேன்.. எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்”- விஜய்

மதுராந்தகம் தொகுதியை பொருத்தவரை சென்னைக்கு அருகே இருக்கும் தொகுதி என்பதால் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று விடலாம் என நம்பிக்கையில் இருக்கிறது.
மேலும் இரண்டு முறை அங்கு முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்ததும் வாக்காளர்களுடைய ஆதரவை பெருக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தாராபுரம் தொகுதியில். தவெக வேட்பாளர் சத்யபாமா பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் போர்வையில் எதிர்க்கட்சிகள் விரட்டினர்.  இது தொடர்பான தகவல் உளவுத்துறை மூலம் முதல்வரின் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தாராபுரம் தொகுதியில் நாளை முதல்வர விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். மதுராந்தகத்தை போலவே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது, பொதுமக்களை சந்திப்பது, விவசாயிகள் சந்திப்பு என பல்வேறு திட்டங்கள் இருக்கிறதாம். அது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமைச்சரவை பட்டாளமும் தாராபுரத்தை சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைக்கு 2க்கு 1 என்ற நிலையில் தவெக இருக்கும் நிலையில் அதை 2ஆக மாற்ற வேண்டும் என முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.