ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக நிறைவு - நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்

 
tn

ஸ்பெயின் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு வருகை தந்துள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கடந்த 29ஆம் தேதி  தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக, ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை  நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr. Rafael Mateo அவர்களும், Mr. Manuel Manjón Vilda, CEO Water Division அவர்களும்  தமிழ்நாடு முதலமைச்சரை  சந்தித்து பேசினார்கள்.

tn

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  ஸ்பெயினில் முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர், எடிபன் நிறுவனத்துடன் ரூ. 540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.