குறுவை சாகுபடி பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை

 
stalin

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரணம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

stalin

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையானது கடந்த ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்பட்டது.  குறிப்பிட தேதியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான தண்ணீர் விவசாயிகள் பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.  நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் ஆற்றுப் பாசனத்தை நம்பி மட்டுமே சாகுபடி செய்திருந்தனர்.  ஆனால் காவிரியில் இருந்து போதிய  தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகின. 

mk stalin

இந்நிலையில் குறுவைப் பயிர்கள் பாதிப்பு தொடர்பாகவும் , விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்று கூறப்படுகிறது.