முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து

 
stalin stalin

மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.

stalin

காங்கிரஸ் ,திமுக ,சமாஜ்வாதி ,தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல்  காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சித் தலைவர்களும் இக்கூற்றத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

stalin

 இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் முதலமைச்சரமான மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்த சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.  அவருக்கு பதிலாக திமுக பொருளாளர்   டி.ஆர். பாலு கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் முதல் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.