லாலு பிரசாத் யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

 
tt

ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tt

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக லாலு பிரசாத் யாதவ் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள் மற்றும் மதச்சார்பின்மைக்கான அவரின் உறுதியான கொள்கை முடிவு ஆகியவை நியாயமான மற்றும் சமநிலை சமூகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன;


உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.