ஆர்.எம்.வீரப்பனின் 98 ஆவது பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

ஆர்.எம்.வீரப்பனின் 98-ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்!
எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) September 9, 2023
நம் பாசத்திற்குரிய ஆர்.எம்.வீ. அவர்கள் நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்! pic.twitter.com/cJcVRDO5fw
நம் பாசத்திற்குரிய ஆர்.எம்.வீ. அவர்கள் நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.