ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு நவீன ரோந்து வானங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 
ரோந்து வாகனங்கள்  - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆவடி, தாம்பரம் மாநகர காவல்துறைக்கான புதிய ரோந்து வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்  நிர்வாக வசதிக்காக , தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரிக்கப்பட்டது.  அதன்படி தாம்பரம் மற்றும் ஆவடியில்  புதிதாக  மாநகர காவல் ஆணையர் அலுவலகங்கள் கட்டப்பட்டன.  இதனை ஜனவரி 1 ஆம் தேதி  (01.01.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு  காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  இதில் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக கூடுதல் டி.ஜி.பி.  ரவி பொறுப்பேற்றார்.   இதேபோல் ஆவடி  மாநகர காவல் ஆணையரகத்தின் முதல் கமிஷனராக  சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றுக்கொண்டார்.  

20 நவீன ரோந்து வாகனங்கள்

இதில் தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் 13 , காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் கொண்டுவரப்பட்டன.  அதேபோல் ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  5 காவல் நிலையங்கள் என மொத்தம்  25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன.

ரோந்து வாகங்கள் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்நிலையில் இன்று தாம்பரம் மற்றும் ஆவடி  காவல் ஆணையரக அலுவலகங்களுக்கான புதிய ரோந்து வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 20 புதிய ரோந்து வாகனக்களை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.  இந்த வாகனங்களில் மேற்கூரையில் மின்னொளி விளக்குகள், சைரன், வாக்கி டாக்கி கருவிகள், வழித்தட வரைபடக்களைக் காட்டும் டிஜிட்டல் கருவி, வாகன ஓட்டிகளை பரிசோதிக்கும் மூச்சுக்குழல், பொது அறிவிப்புகளை வெளியிட வயர்லெஸ் தொடர்பு சாதனம், மைக் மற்றும் ஒலிபெருக்கி போன்ற நவீன வசதிகள் உள்ளனர்.  சிவப்பு நிற வண்ணத்தில் இருக்கும் இந்த 20 கார்களும், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரக சரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.