ரஜினி டயலாக் பேசிய CM ஸ்டாலின்..!!

 
Q Q

ரஜினிகாந்த் வசனத்தை முதல்வர் ஸ்டாலின் பேசி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.

சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.. இங்கு நெகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. கூடுதல் பொறுப்புணர்வை இந்த பாராட்டு விழா எனக்கு தருகிறது. இன்னும் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் உள்ளது.

அவற்றை நிறைவேற்றுவதற்கு மீண்டும் நாங்கள் ஆட்சியமைப்போம். புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர் கல்வியில் சேர்வது 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தால் நகர்ப்புற மாணவிகளைக் காட்டிலும் கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். பட்டப்படிப்புடன் நிறுத்தாமல், ஆராய்ச்சி படிப்பு வரை பெண்கள் படிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை பெண்கள் என்றாலே அழகுதான். அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு. படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகிலேயே அழகான அணிகலம். பெண்கள் முன்னேறினால், ஒரு தலைமுறையே முன்னேறும். வெற்றிக்கு எப்போதும் ஷார்ட் கட் கிடையாது. கடின உழைப்பை கொடுத்தால் தான் வெற்றி பெற்ற முடியும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனம் ஒன்று வரும்.. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.. அப்படி கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது.. அதனால் வெல்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது. தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உள்ளது. சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி தமிழ்நாட்டில் மட்டும்தான் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.