கொடைக்கானல் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

 
tn

ஐந்து நாட்கள் பயணமாக கொடைக்கானல் புறப்பட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

stalin

கோடை காலத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.29) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கொடைக்கானல் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.  சென்னையில் இருந்து விமான மூலமாக மதுரைக்கு செல்லும் முதலமைச்சர் மதுரையிலிருந்து காரில் சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்கிறார். மதியம் ஒரு மணி அளவில் கொடைக்கானல் பாம்பார் புறம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அவர் தங்குகிறார்.

stalin

முதலமைச்சரின் வருகை ஒட்டி கொடைக்கானல் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . முதலமைச்சர் வருகையினால் இன்று முதல் வருகிற நான்காம் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.