சேலத்திற்கு இன்று செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
tn

சேலத்தில் நாளை மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது. 

tn

இந்நிலையில் சேலத்தில் நாளை நடைபெறவுள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

stalin

மாநாட்டு பந்தலுக்கு சென்று இருசக்கர வாகன பேரணியையும், ட்ரோன் ஒளிக் காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார்.