"வெற்றியை நழுவவிட்டால் அமைச்சர் பதவி நழுவிவிடும்" - அமைச்சர்களுக்கு எச்சரிக்கை!!

 
stalin

மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

stalin

மக்களவைத் தேர்தலை ஒட்டி நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  அப்போது பேசிய அவர் , உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும். தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வரவும்.மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக - பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும்.அமைச்சர்களின் மாவட்டம் - பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும்.

M.K.Stalin

கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும். 40 தொகுதிகளில் வெல்வதுடன் திமுக பங்கு வகிக்கும் அரசாங்கம் மத்தியில் அமைய வேண்டும். எல்லா தொகுதியிலும் நான்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள் என்று தெரிவித்துள்ளார்.