திருநங்கை நிவேதா மற்றும் மாணவர் சின்னதுரைக்கு முதல்வர் வாழ்த்து

 
tn

தடைகளை கடந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னதுரை மற்றும் திருநங்கை நிவேதாவை வாழ்த்தினார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  சாதி வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை +2 தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதேபோல் +2 தேர்வில் வெற்றி பெற்ற ஒரே ஒரு திருநங்கையான நிவேதாவும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

tn

சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளான மாணவர் சின்னதுரை, தான் BCom படித்துவிட்டு CA படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கூறியுள்ளார்.  நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும், மருத்துவப்படிப்புக்கான சீட் கிடைக்கும் என நம்புவதாகவும் திருநங்கை நிவேதா கூறியுள்ளார்.  இதன் காரணமாக உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.