சோ ராமசாமி மனைவி மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

 
stalin stalin

 
துக்ளக் நிறுவனரும் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமி அவர்களின் மனைவி  சௌந்தரா ராமசாமி  மறைவுக்கு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   இரங்கல்  தெரிவித்துள்ளார்.  

சோ ராமசாமி மனைவி மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. 

 இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரங்கல் குறிப்பில், “துக்ளக்  நிறுவனரும் அப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து மறைந்த மூத்த பத்திரிகையாளர் திரு. சோ ராமசாமி அவர்களின் மனைவி திருமதி. சௌந்தரா ராமசாமி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சோ ராமசாமி மனைவி மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. 

திரு. சோ அவர்கள் தனது வாழ்நாளில் பத்திரிகை உலகிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்ததற்கு உற்ற துணையாக இருந்த திருமதி. சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.