சி.எம் SIR.... தவெக அரசின் வாக்குறுதி என்னாச்சு? உதயநிதி கேள்வி
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிக்கை;
முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை ஸ்லேப் (Slab) வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள்.
இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்?இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள், அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள். காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் நாம் பேசிய போது, 'ஏற்கனவே கொடுத்துவிட்டோம்' என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதல்வர், இப்போது என்ன சொல்லப் போகிறார்?
இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், திமுக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த சர்க்கஸ் அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

