சி.எம். சார் நீங்க கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை - உதயநிதி தாக்கு..!
எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க நிர்வாகிகளுக்கான நன்றி தெரிவித்தல் கூட்டத்தில் பேசியதாவது,"அவர் கருப்பு கோட் போடுவது பெரியார் நினைவாக என்கிறார், இதைவிட பெரிய உருட்டு ஏதாவது இருக்கிறதா? கோட் சூட் போட்டதெல்லாம் பிரச்னை கிடையாது. எல்லா விதத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் பிரச்னை!” என்றார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- "புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆயிற்று; உருப்படியாக ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா?. ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி ‘சிங்கப்பெண்' என்ற திட்டத்தை கொண்டு வருவோம் எனச் சொல்லி, அதையும் செய்ய முடியாத, சோஃபா மாடல் ஆட்சிதான் இது.
எதைக் கேட்டாலும் திமுக செய்கின்ற சதி என்று கூறுகிறார்; இப்படிப்பட்ட முதலமைச்சரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள், அந்த முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தூர சக்தி, ஓர சக்தி, பார சக்தி என்று திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் போல ரைமிங்காக டயலாக் பேசுகிறார்.
ஸ்டிக்கரை மாற்றி, சிங்கப்பெண் என்ற திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி அதையும் கொண்டுவர வக்கில்லாத ஒரு சோபா மாடல் ஆட்சி தற்போதைய ஆட்சி.
யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது.
தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தவெக அரசின் முகத்திரையை கிழிப்பார்கள், முடிவரை எழுதுவார்கள்.ரீல்ஸ் போட்டவர்கள் செய்தி பார்க்கிறார்கள் என முதல்வர் கூறியதற்கு அதுதான் உங்கள் வீழ்ச்சிக்கு காரணமாகப்போகிறது.
மக்கள் சட்டமன்றத்தை தொடர்ந்து கவனிப்பார்கள், இந்த மாற்றமும் விழிப்புணர்வும் தான் தவெகவின் வீழ்ச்சிக்கு காரணமாகப்போகிறது.மீண்டும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம்.எமர்ஜென்சியை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது எங்கள் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று மக்களுடன் நின்றது திமுக.பயம் என்பது திமுகவிற்கு கிடையாது. எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் மீண்டும் எழுந்து வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

