முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை உடலுக்கு முதல்வர் அஞ்சலி

மறைந்த முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் கே. சாமிதுரை வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. எளிய பின்புலத்தில் பிறந்து, கடும் உழைப்பால் உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து சட்டத்தின் துணையுடன் சமூகநீதியை நிலைநாட்டியவர் சாமிதுரை . முதன்முறை உயர்நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்த, பதவி மேல் ஆசைகொள்ளாத அரிய மனிதர் அவர். பின்னர் இரண்டாம் முறை வாய்ப்பு வந்தபோதுதான் மரபு கருதி அதனை ஏற்றுக்கொண்டார்.
உடல்நலக்குறைவால் காலமான சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. கே.சாமிதுரை அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். pic.twitter.com/GabpqARWzu
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 31, 2023
இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமான சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. கே.சாமிதுரை அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் , நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.