தமிழகத்தின் 2 ஆவது தலைநகரம் எது? முதல்வர் பழனிசாமியின் திட்டவட்டமான பதில்!

 

தமிழகத்தின் 2 ஆவது தலைநகரம் எது? முதல்வர் பழனிசாமியின் திட்டவட்டமான பதில்!

ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் பழனிசாமி இன்று காலை நாமக்கல் மாவட்டத்துக்கு சென்றிருந்தார். அங்கு ரூ.243 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடக்கி வைத்த அவர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், மதுரை தான் 2 ஆவது தலைநகரம் என அமைச்சர் உதயகுமார் கூறுவது அவரின் கருத்து மட்டுமே, அரசின் கருத்தல்ல என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தின் 2 ஆவது தலைநகரம் எது? முதல்வர் பழனிசாமியின் திட்டவட்டமான பதில்!

தொடர்ந்து, அரசு விழாவுக்கு திமுகவினரை அழைப்பதில்லை என முக ஸ்டாலின் எழுப்பியிருந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர், கொரோனா இல்லை என்றால் அரசுக்கு விழாவுக்கு யாரும் வரலாம், அதிமுக யாரையும் தடுக்கவில்லை என கூறினார். அதே போல, இ பாஸ் நடைமுறையால் தான் கொரோனா இருப்பதை கண்டுபிடிக்க முடிகிறது என்றும் தமிழகத்தில் ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், ஹெச்.ராஜா கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமாரே காட்டமான பதில் அளித்து விட்டார் என்றும் தெரிவித்தார்.