பழனிசாமியின் குரலே, பாஜகவுக்கான டப்பிங் குரல்தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

டெல்லி தேர்தல் முடிவு குறுத்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை பாஜகவின் அறிக்கை போன்றுதான் இருந்தது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

உங்களில் ஒருவன் நிகழ்ச்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வீடியோ மூலம் உரையாற்றினார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: நான் தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது. என் பொறுப்புகள் இன்னும் கூடியுள்ளது.  அப்பா என்ற உறவு எனக்கு மிகவும் நெருக்கமானது. இளைய தலைமுறை என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. 

டெல்லி தேர்தல் முடிவு குறுத்த பழனிசாமி அறிக்கை பாஜகவின் அறிக்கை போன்றுதான் இருந்தது.  பழனிசாமியின் குரலே, பாஜகவுக்கான டப்பிங் குரல்தான்.  கள்ளக்கூட்டணி என்பதை நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தோல்விகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை முழுவதும் புறக்கணித்துள்ளனர். சில ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை. பெயரையும் சொல்வதில்லை. தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக புள்ளி விவரங்களுடன் மத்திய அரசே அறிக்கை வெளியிடுகிறது. மத்தியில் இருப்பவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா என கேட்கத் தோன்றுகிறது என கூறினார்.