சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்தி - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 
stalin

 சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

tn

ஆங்கில எழுத்தாளர் மமாங் தய் எழுதிய ‘The Black Hill’ என்ற நாவலை, தமிழில் ‘கருங்குன்றம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த, ஐயா திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட The Black Hill நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான  @sahityaakademi விருது பெறும் திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு எனது பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.