சர்வதேச செவிலியர் தினம் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

 
stalin

உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ttn

சர்வதேச செவிலியர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சர்வதேச தினமாகும் , இது செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைக் குறிக்கும் .  சர்வதேச செவிலியர் கவுன்சில் 1965 ஆம் ஆண்டு முதல் இந்நாளைக் கொண்டாடி வருகிறது. 1953 ஆம் ஆண்டில் அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதி சதர்லேண்ட், ஜனாதிபதி டுவைட் டி. ஐசன்ஹோவர் "செவிலியர் தினத்தை" பிரகடனப்படுத்த முன்மொழிந்தார்; ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. ஜனவரி 1974 இல், நவீன செவிலியர்களின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் என்பதால் மே 12 அன்று கொண்டாடப்பட்டது .இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்! என்று பதிவிட்டுள்ளார்.