"நீரில் மூழ்கிய பயிர்கள்... முதல்வர் விரைவில் நிவாரணம் அறிவிப்பார்"

 
ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு மட்டுமில்லாமல் தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிற மாவட்டங்களிலும் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 1.45 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்களும் 6 ஆயிரம் ஏக்கர் தோட்டகலை பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதுதொடர்பாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், "தமிழ்நாட்டில் 44 லட்சம் ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

புயல்களைத் தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு! மீண்டும் மத்திய  குழுவை அழைக்க பரிந்துரை!

இதில்,1.45 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தற்போது மழை குறைந்துள்ளதால் டெல்டா பகுதிகளில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. மழை முழுமையாக குறைந்ததும் கணக்கெடுக்கப்படும். 33 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு இருந்தால் அதை அறிந்து உரிய நிவாரணம் தர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதேபோல், 31.76 லட்சம் ஏக்கர் தோட்டக்கலை பயிர்களில் 6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. 

திருவாரூர்: கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.. கவலையில் விவசாயிகள்..!  - Seithipunal

மழை நீர் வடிந்ததும் முழுமையான பாதிப்பு தெரியும். தற்போது, பயிர் பாதிப்புகளை அறிந்து அதன்படி நிவாரண நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவை முதல்வர் அறிவித்துள்ளார். இவர்கள் டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுசெய்து, பாதிப்புகளைக் கணக்கிட்டு   அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்குவார்கள். அமைச்சர்களின் அறிக்கை கிடைத்த பின், முதலமைச்சரே உடனடியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தை அறிவிப்பார்” என்றார்.