நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Sep 7, 2023, 08:41 IST1694056318158

நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சர்வதேச அளவிலான ஜி20 அமைப்புக்கு இந்தியா இந்த முறை தலைமை ஏற்றுள்ளது. அதன்படி ஜி20 குழுவின் 18 வது மாநாடு வருகிற நாளை முதல் 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன. அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியா பிரதமர் , பிரிட்டன் பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கிறார். இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் அவர் பங்கேற்கிறார்.