தேர்தல் ஆணையர் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - மு.க.ஸ்டாலின் வரவேற்பு

 
MK Stalin

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். 

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு  இந்த மனுக்களை விசாரித்து வந்தது.  இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.   உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு வழங்கிய தீர்ப்பில், “நியாயமாக தேர்தல்கள் நடைபெற தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. சட்டத்தின் ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்காத தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜனநாயகம் மக்களின் சக்தியுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டின் வலிமை மிக உயர்ந்தது, மிகவும் சக்திவாய்ந்த கட்சிகளை வீழ்த்தும் திறன் கொண்டது.  சிபிஐ இயக்குநர் தேர்வு செய்யப்படுவது போல் தலைமை தேர்தல் ஆணையரும் தேர்வு செய்யப்பட வேண்டும். பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும். தலைமைச் தேர்தல் ஆணையரையும் இந்தக் குழுவே தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதைப் போலவே பதவி நீக்கம் செய்யும் முறையும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

supreme court

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்ட பக்கத்தில், தன்னாட்சி அமைப்புகள்' கொள்ளையடிக்கப்படும்போது, ​​உச்சநீதிமன்றத்தின், இந்த சரியான நேரத்தில் தலையீடு, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முக்கியமானது. தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான செயல்பாடு ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.