#BREAKING கள்ளச்சாராயம் விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்

 
tn

கள்ளச்சாராயம் குடித்ததால்  பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ttnt

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 30க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில்  சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். அத்துடன்  கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் (66) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

stalin

இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இன்று காலை விழுப்புரத்திற்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்ற முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து கொண்டுள்ளார்.