மனைவியுடன் கோபாலபுரத்திற்கு விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின் - வைரல் போட்டோஸ்!!

 
stalin

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழக முதல்வராக மு .க. ஸ்டாலின் பதவியேற்று கொண்டாடப்படும் முதல் பொங்கல் விழா என்பதால் இது திராவிட முன்னேற்ற கழகத்தினருக்குமுக்கியத்துவம் வாய்ந்த பொங்கலாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பொங்கல் தினத்தில் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் திமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக தற்போது தொண்டர்கள் நேரில் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

stalin

இருப்பினும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வாழைத் தோரணங்கள், வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் என கோலமிடப்பட்டு பொங்கல் விழா களைக்கட்டியுள்ளது. அத்துடன் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து பதாகைகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. 

stalin

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி  ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.  அதேபோல் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின்  திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு  மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.